< Back
தேசிய செய்திகள்
நெடுஞ்சாலையில் அரசு பஸ்கள் மோதியதில் 2 பயணிகள் பலி
தேசிய செய்திகள்

நெடுஞ்சாலையில் அரசு பஸ்கள் மோதியதில் 2 பயணிகள் பலி

தினத்தந்தி
|
29 Oct 2024 3:50 PM IST

புனேவில் அரசு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 2 பயணிகள் உயிரிழந்தனர். 64 பேர் காயமடைந்தனர்.

புனே,

மராட்டிய மாநிலம் புனே-சோலாப்பூர் நெடுஞ்சாலையில் புனே நோக்கி சென்ற அரசு பஸ் சோலாப்பூர் நோக்கி சென்ற பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 2 பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் 64 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து காவல் ஆய்வாளர் நாராயண் தேஷ்முக் கூறுகையில், "புனே நோக்கி சென்ற பஸ் முன்னால் இரு சக்கர வாகனம் ஒன்று திடீரென வந்ததால், அதன் மீது மோதாமல் இருக்க வளைத்தபோது, டிவைடரை தாண்டி, எதிர் திசையில் வந்த பஸ் மீது மோதியது. பஸ்களில் 110க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் இரு பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 64 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்" என்றார்.

மேலும் செய்திகள்