ஜம்மு-காஷ்மீரில் போதைப்பொருள் பறிமுதல்; 2 பேர் கைது
|ஜம்மு-காஷ்மீரில் போதைப்பொருளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடுக்கு அருகே உள்ள நவ்ஷேரா செக்டார் பகுதியில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் நடத்திய கூட்டு சோதனையில் சந்தேகிக்கப்படும் இருவரிடம் இருந்து 5.50 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சஜன் குமார் (25) மற்றும் சுபாஷ் சந்தர் (36) என அடையாளம் காணப்பட்டுள்ளன.
முன்னதாக, ஜம்முவின் அர்னியா செக்டரில் உள்ள சர்வதேச எல்லையில் நேற்று முன்தினம் பாகிஸ்தானின் டிரோன் மற்றும் அரை கிலோ எடையுள்ள போதைப்பொருட்களை எல்லை பாதுகாப்புப்படையினர் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.