தடை செய்யப்பட்ட போதைப்பொருள் வைத்திருந்ததாக தொலைக்காட்சி நடிகை கைது
|தடை செய்யப்பட்ட போதைப்பொருள் வைத்திருந்ததாக 34 வயதான தொலைக்காட்சி நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்லம்,
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் தனது வீட்டில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை வைத்திருந்ததாக 34 வயதான தொலைக்காட்சி தொடர் நடிகை கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர் அங்குள்ள ஒழிவுபாறையைச் சேர்ந்த ஷாம்நாத் என்று அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
முன்னதாக கிடைத்த ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில், ஒழிவுபாறையில் அமைந்துள்ள நடிகையின் வீட்டில் போலீஸ் குழு சோதனை நடத்தியது, மேலும் அவர் வைத்திருந்த மெத்திலினெடியோக்சிபெனெதிலமைன் (எம்டிஎம்ஏ) போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து போதைப்பொருள் மருந்துகள் மற்றும் மனநோய் பொருட்கள் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் நடிகையை கைது செய்த போலீசார், தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை அவருக்கு சப்ளை செய்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.