< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அமித்ஷா மீது மாநிலங்களவையில் உரிமைமீறல் நோட்டீஸ் தாக்கல் செய்த திரிணாமுல் காங்கிரஸ்
|18 Dec 2024 7:08 PM IST
அமித்ஷா மீது மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உரிமைமீறல் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சர்ச்சையாக பேசியதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தனது பேச்சுக்கு அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில், அமித்ஷா மீது மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரக் ஓ'பிரையன் உரிமைமீறல் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார். மாநிலங்களவை நடைமுறை மற்றும் நடத்தை விதி 187-ன் கீழ் இந்த நோட்டீஸ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் அரசியலமைப்பு மீதான விவாதத்தின்போது அமித்ஷா பேசிய கருத்துகள் இந்த நோட்டீசில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.