< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
|14 Oct 2024 5:18 PM IST
கனமழை எதிரொலியாக புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இது வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை, நாளை மறுதினம் புதுச்சேரி, தமிழகத்தின் வட மாவட்டங்கள், தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் நிலவக்கூடும். இதன் காரணமாக இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கனமழை எதிரொலியாக புதுச்சேரியில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முன்னதாக மிக கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.