< Back
தேசிய செய்திகள்
பொருளாதாரத்துக்கு எது சிறந்ததோ அதை செய்வேன் -  சஞ்சய் மல்ஹோத்ரா
தேசிய செய்திகள்

பொருளாதாரத்துக்கு எது சிறந்ததோ அதை செய்வேன் - சஞ்சய் மல்ஹோத்ரா

தினத்தந்தி
|
10 Dec 2024 11:16 PM IST

ரிசர்வ் வங்கி கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா இன்று (11-ம் தேதி)பதவி ஏற்கிறார்.

புதுடெல்லி,

ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த சக்திகாந்த தாஸ் நேற்று ஓய்வு பெற்றார். புதிய கவர்னராக, மத்திய நிதி அமைச்சசகத்தில் வருவாய் செயலாளராக பணியாற்றும் சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். 56 வயதான அவர், 26-வது ரிசர்வ் வங்கி கவர்னராக இன்று (புதன்கிழமை) பொறுப்பேற்கிறார். இது, 3 ஆண்டுகால பதவி ஆகும். மத்திய நிதி அமைச்சக அலுவலகத்துக்கு வந்த சஞ்சய் மல்ஹோத்ராவிடம் அவரது பணி எப்படி இருக்கும் என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு சஞ்சய் மல்ஹோத்ரா, 'முதலில் களத்தையும், அனைத்து கண்ணோட்டங்களையும் புரிந்துகொள்ள வேண்டும்.

அதன்பிறகு பொருளாதாரத்துக்கு எது சிறந்ததோ அதை செய்வேன்' என்று கூறினார். இதற்கிடையே, ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் 6 ஆண்டுகள் பணியாற்றிய சக்திகாந்த தாஸ், தனக்கு வாய்ப்பு அளித்த பிரதமர் மோடி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்