< Back
தேசிய செய்திகள்
திருப்பதி லட்டு விவகாரம் - சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தொடங்கியது
தேசிய செய்திகள்

திருப்பதி லட்டு விவகாரம் - சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தொடங்கியது

தினத்தந்தி
|
29 Nov 2024 8:24 PM IST

திருப்பதி லட்டு கலப்படம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு தனது விசாரணையை தொடங்கியது.

திருப்பதி,

ஆந்திராவில் கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டுகளில் விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஆந்திரா அரசு அமைத்த விசாரணை குழுவுக்கு பதிலாக புதிய சுதந்திரமான 'சிறப்பு புலனாய்வுக் குழு' (எஸ்ஐடி) அமைக்க உத்தரவிட்டது

அதன்படி, சிபிஐ இந்த மாத தொடக்கத்தில் 5 அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அமைத்தது. இந்த நிலையில், திருப்பதி லட்டு கலப்படம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு தனது விசாரணையை தொடங்கியது. விசாரணையின் ஒரு பகுதியாக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) பதிவுகள், முந்தைய ஆட்சியில் நெய் கொள்முதல் மற்றும் தரத்தை ஏற்று பொருட்களைப் பெற்ற செயல்முறை தொடர்பான பதிவுகளை சிறப்பு புலனாய்வுக் குழு சரிபார்த்தது.

மேலும் செய்திகள்