< Back
தேசிய செய்திகள்
ஜம்மு காஷ்மீர்; ஓட்டல் அறையில் இருந்து 3 இளைஞர்கள் உடல் கண்டெடுப்பு
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்; ஓட்டல் அறையில் இருந்து 3 இளைஞர்கள் உடல் கண்டெடுப்பு

தினத்தந்தி
|
2 Jan 2025 10:28 AM IST

இளைஞர்களின் மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் பதேர்வாவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அசுதோஷ் சிங் என்பவர் தனது 2 நண்பர்களுடன் நேற்று புத்தாண்டு கொண்டாட வந்துள்ளார். அப்போது அசுதோஷ் சிங்கின் குடும்பத்தினர் போனில் அவரை தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர். ஆனால் தொடர்பு கொள்ள முயலாததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவர்கள் தங்கியிருந்த அறையின் கதவை தட்டியுள்ளனர். ஆனால் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால் சந்தேகித்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது இறந்த நிலையில் 3 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் இளைஞர்களின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்கள் முகேஷ் சிங்(39), அசுதோஷ் சிங், சன்னி சவுத்ரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்