< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கர்நாடகாவில் நடந்த சாலை விபத்தில் 3 பெண்கள் பலி
|2 Dec 2024 11:16 AM IST
கர்நாடகாவில் நடந்த சாலை விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு,
கோவாவில் இருந்து சுமார் 30 பயணிகளுடன் பெங்களூரு நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சிரா தாலுகாவில் உள்ள சிக்கனஹள்ளி மேம்பாலத்தில் இருந்த சாலை தடுப்பில் பஸ் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல, விபத்தில் காயமடைந்தனர்களை மீட்டு அருகில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் சிபாலி சிங், ஊர்வி மற்றும் பிரியங்கா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.