குஜராத் சாலை விபத்தில் 3 பேர் பலி
|குஜராத்தில் நடத்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.
காந்திநகர்,
மராட்டிய மாநிலம் பால்கரை சேர்ந்த 7 பேர் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நடந்த உர்ஸ் திருவிழாவில் கலந்து கொண்டுவிட்டு சூரத் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது குஜராத்தின் பரூச் மாவட்டத்தின் பனோலி அருகே உள்ள பாலத்தில் சென்றபோது காருக்கு பின்னால் வந்த டிரக் அதன்மீது முதலில் மோதியது. மோதலின் தாக்கம் காரணமாக, கார் அதற்கு முன்னால் மெதுவாக சென்ற மற்றொரு டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக பரூச்சில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உயிரிழந்தவர்கள் தாஹிர் ஷேக் (32), அயன் (23) மற்றும் முதாசர் (26) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.