< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
தேசிய செய்திகள்

டெல்லியில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தினத்தந்தி
|
13 Dec 2024 8:43 AM IST

டெல்லியில் தனியார் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள மூன்று பள்ளிகளுக்கு இன்று அதிகாலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து அந்த பள்ளிகளில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக டெல்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பஸ்சிம் விஹாரில் உள்ள பட்நகர் சர்வதேச பள்ளிக்கு காலை 4.21 மணிக்கும், ஸ்ரீநிவாஸ் பூரியில் உள்ள கேம்பிரிட்ஜ் பள்ளிக்கு காலை 6.23 மணிக்கும் மற்றும் கைலாஷின் கிழக்கில் உள்ள டிபிஎஸ் அமர் காலனியில் இருந்து காலை 6.35 மணிக்கும் எங்களுக்கு அழைப்புகள் வந்தன. தீயணைப்பு துறையினர், மோப்ப நாய்கள், வெடிகுண்டு கண்டறியும் குழுவினர், உள்ளூர் போலீசார் ஆகியோர் பள்ளிகளுக்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்" என்றார்.

வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து பள்ளிகளுக்கு மாணவர்கள் வரவேண்டாம் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இ-மெயில் அனுப்பிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, கடந்த 9ம் தேதி குறைந்தபட்சம் 44 பள்ளிகளுக்கு இதே போன்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து பள்ளிகளில் நடந்தப்பட்ட சோதனைக்கு பிறகு அந்த மிரட்டல்கள் புரளி என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்