< Back
தேசிய செய்திகள்
3 பழங்குடியின மாணவர்கள் உயிரிழப்பு: நிவாரணம் அறிவித்த ஆந்திர முதல்-மந்திரி
தேசிய செய்திகள்

3 பழங்குடியின மாணவர்கள் உயிரிழப்பு: நிவாரணம் அறிவித்த ஆந்திர முதல்-மந்திரி

தினத்தந்தி
|
20 Aug 2024 9:16 PM IST

மாணவ, மாணவிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அனகாபள்ளி,

ஆந்திர மாநிலம், அனகாபள்ளி மாவட்டம் கொடவரோட்லா மண்டல் பகுதியில் உள்ள கிறிஸ்தவ அமைப்பின் விடுதியில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 பழங்குடியின மாணவ, மாணவிகள் உயிரிழந்தனர்.

இந்நிலையில் மூன்று குழந்தைகள் இறந்தது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார், மேலும் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் அல்லது பாதுகாவலர்களுக்கு தலா ரூ.10 லட்சம் கருணைத் தொகையை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்