< Back
மாநில செய்திகள்
தேசிய கொடியை பச்சை குத்தியதை பார்த்து காங்கிரசில் சேர்ந்து விட்டீர்களா என்று கேட்டார்கள் - சரத்குமார்
மாநில செய்திகள்

'தேசிய கொடியை பச்சை குத்தியதை பார்த்து காங்கிரசில் சேர்ந்து விட்டீர்களா என்று கேட்டார்கள்' - சரத்குமார்

தினத்தந்தி
|
25 Dec 2024 8:46 PM IST

தேசிய கொடியை பச்சை குத்தியதை பார்த்து காங்கிரசில் சேர்ந்து விட்டீர்களா என்று கேட்டார்கள் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் பா.ஜ.க. சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தின நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் எம்.பி. சரத்குமார், நயினார் நாகேந்திரன் மற்றும் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசியபோது சரத்குமார் கூறியதாவது;-

"சைக்கிளில் சென்று செய்தித்தாள் விநியோகம் செய்துகொண்டிருந்த நான், பத்திரிக்கையாளராக இருந்து இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு பின்னால் கடுமையான உழைப்பு இருந்தது. இன்னும் பல வெற்றிகளை காண வேண்டும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன் என்றால், அதற்கு காரணம் தேசியம் என் உடலில் இருந்து கொண்டே இருக்கிறது.

தேசியம் என்பது சாதாரண விஷயம் கிடையாது. நாடுதான் முதன்மையானது, மற்றவையெல்லாம் அதற்கு பிறகுதான். எனது வலது தோள்பட்டையில் தேசிய கொடியை பச்சை குத்தியிருக்கிறேன். ஆனால் தேசிய கொடியை பச்சை குத்திய பிறகு எனக்கு ஒரு சிறிய வருத்தம் வந்தது. ஒருமுறை படப்பிடிப்பில் இருக்கும்போது தேசிய கொடியை பச்சை குத்தியதை பார்த்து, நீங்கள் எப்போது காங்கிரசில் சேர்ந்தீர்கள் என்று கேட்டார்கள்.

காங்கிரஸ் கட்சியிடம் மகாத்மா காந்தியே இந்த கொடி வேண்டாம், வேறு கொடியை மாற்றுங்கள் என்று சொல்லியிருக்கிறார். இதனால் காங்கிரஸ் கட்சி கொடியை சரத்குமார் மாற்ற சொல்கிறார் என்று நினைத்து விடாதீர்கள். அவர்களே அதை மாற்றிக்கொள்வார்கள்."

இவ்வாறு சரத்குமார் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்