மராட்டியத்தில் முதல் மந்திரி யார் என்பதில் பிரச்சினை இல்லை: தேவேந்திர பட்னாவிஸ்
|மராட்டியத்தில் முதல் மந்திரி யார் என்பதில் பிரச்சினை இல்லை என்று பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மும்பை,
மராட்டிய சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்து உள்ளது. பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்த முதல் மந்திரி யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பாஜக மூத்த தலைவரும் துணை முதல் மந்திரியுமான தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:
மராட்டிய மக்கள் வரலாறு காணாத வெற்றியை அளித்து உள்ளனர். பிரதமர் மோடி பக்கம் மக்கள் உள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக எங்களுக்கு ஓட்டுப் போட்டு உள்ளனர். மகாயுதி, முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல் மந்திரி அஜித் பவார் மற்றும் ராம்தாஸ் அத்வாலே ஆகியோருக்கு கிடைத்த வெற்றி. ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. யார் முதல் மந்திரி என்பதில் பிரச்னை இல்லை. ஒரே நாளில் மூன்று கட்சிகளும் அமர்ந்து பேசி பதவி குறித்து முடிவு செய்யப்படும். இதனை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். இதில் எந்த பிரச்னையும் இல்லை" என்றார்.