< Back
தேசிய செய்திகள்
வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளது: உத்தவ் சிவசேனா
தேசிய செய்திகள்

வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளது: உத்தவ் சிவசேனா

தினத்தந்தி
|
26 Nov 2024 3:40 AM IST

மராட்டிய சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி படு தோல்வியை சந்தித்தது.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 288 இடங்களில் 230 இடங்களை வென்றது. அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணி 46 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தது. அந்த கூட்டணியில் உள்ள உத்தவ் சிவசேனா கட்சி போட்டியிட்ட 95 இடங்களில் 20-ல் மட்டுமே வென்றது.

இந்தநிலையில், உத்தவ் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மராட்டியத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் செயலிழந்ததாக கூறப்பட்டன. மின்னணு எந்திரங்கள் மூலம் முறகேடுகள் நடந்துள்ளது. இந்த தேர்தல்கள் நியாயமாக நடந்ததாக எப்படி கூற முடியும்?. எனவே, தேர்தல் முடிவுகளை ஒதுக்கிவிட்டு வாக்கு சீட்டுகள் மூலம் மறுதேர்தலை மீண்டும் நடத்தவேண்டும்.

இந்த தேர்தலில் மகாவிகாஸ் அகாடிக்கு ஏற்பட்ட தோல்விக்கு தனி ஒருவர் மட்டும் காரணம் இல்லை. நாங்கள் ஒருங்கிணைந்து தான் போராடினோம். தோல்வியின் பின்னணியில் உள்ள காரணங்களை ஆராய வேண்டும் என்பதை இது காட்டுகிறது. எங்கள் கூட்டணிக்குள் வேறுபாடுகள் இருந்திருக்கலாம் என்றாலும், தோல்விக்கு கூட்டு பொறுப்பேற்கிறோம்" என்றார்.

மேலும் செய்திகள்