< Back
தேசிய செய்திகள்
தென்பெண்ணை நீர் பங்கீடு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

தென்பெண்ணை நீர் பங்கீடு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

தினத்தந்தி
|
17 July 2024 1:17 PM IST

பேச்சுவார்த்தை குழு அதன் அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 8 வாரங்கள் அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

தென்பெண்ணை நீர் தாவா நடுவர்மன்றத்தை அமைக்கக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்.வி. பாட்டீ ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

தென்பெண்ணை நீர் தாவாவுக்கு தீர்வுகாண அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழு 5 முறை கூடி, தென்பெண்ணை நதி நீர்ப்பிடிப்பு உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டுள்ளது. அதன் அறிக்கையை இறுதி செய்து வருகிறது. 6 அல்லது 8 வாரங்களில் அறிக்கையை தாக்கல் செய்வோம் என மத்திய அரசின் சார்பில் வாதிடப்பட்டது.

இதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வக்கீல் வி.கிருஷ்ணமூர்த்தி, மூத்த வக்கீல் ஜி.உமாபதி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை, தரவுகளை மட்டுமே சேகரித்து வருகிறது,

இதேபோன்ற பேச்சுவார்த்தை குழு ஏற்கனவே அமைத்தாகிவிட்டது. தற்போது 2-வது முறையாக பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் அவகாசம் அளிக்கக் கூடாது என வாதிட்டனர்.

அப்போது நீதிபதிகள் தென்பெண்ணை நீர் தாவாவுக்கு தமிழ்நாடு அரசும், கர்நாடக அரசும் இணைந்து தீர்வு கண்டிருக்க வேண்டும் என கருத்து தெரிவித்ததுடன், தென்பெண்ணை நீர் தாவாவுக்கு தீர்வுகாண அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழு அதன் அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 8 வாரங்கள் அவகாசம் அளித்து விசாரணையை தள்ளி வைத்தனர்.

மேலும் செய்திகள்