< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
விவசாயியை உள்ளே விட மறுத்த வணிக வளாகத்திற்கு சீல்.. ஒற்றை வேஷ்டியால் அரங்கேறிய அதிரடி
|18 July 2024 10:15 PM IST
வேஷ்டி அணிந்து வந்த விவசாயியை உள்ளே விட மறுத்த வணிக வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள வணிக வளாகத்திற்கு இளைஞர் ஒருவர், விவசாயியான தனது தந்தையுடன் படம் பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது பணியில் இருந்த காவலர்கள், விவசாயியை வணிக வளாகத்தில் உள்ளே விட மறுத்துள்ளனர். விவசாயி வேஷ்டி கட்டியதால் உள்ளே விட மறுத்ததாக கூறப்படுகிறது.
வேட்டி அணிந்திருந்த விவசாயிக்கு அனுமதி மறுத்த விவகாரம் பெங்களூருவில் பேசுபொருளானது. அத்துடன், இந்த விவகாரம் சட்டமன்றம் வரையிலும் சென்றது.
இந்த நிலையில், வேஷ்டி அணிந்து வந்த விவசாயியை உள்ளே விட மறுத்த வணிக வளாகத்திற்கு ஒரு வாரத்திற்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சீல் வைக்கும் நடவடிக்கைக்காக வணிக வளாகத்திற்குள் உள்ளவர்களை மாநகராட்சி அதிகாரிகள் வெளியேற்றினர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.