< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தெலுங்கானா: கன்டெய்னர் லாரியில் தீ விபத்து; 8 கார்கள் சேதம்
|11 Nov 2024 2:26 AM IST
குஜராத்தில் கன்டெய்னர் லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில், அதில் கொண்டு செல்லப்பட்ட 8 கார்களும் எரிந்து சேதமடைந்தன.
ஜகீராபாத்,
குஜராத்தில் இருந்து தெலுங்கானாவின் ஐதராபாத் நகர் நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி தேசிய நெடுஞ்சாலை 65-ல் சென்று கொண்டிருந்தபோது, ஜகீராபாத் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதில், அந்த லாரியில் இருந்த 8 கார்களும் எரிந்து நாசமடைந்தன. அவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில சம்பவ பகுதிக்கு சென்றனர். தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
எனினும், அதற்குள் கார்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்து விட்டன. மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.