< Back
தேசிய செய்திகள்
மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் ரேவந்த் ரெட்டி கோரிக்கை
தேசிய செய்திகள்

மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் ரேவந்த் ரெட்டி கோரிக்கை

தினத்தந்தி
|
4 July 2024 9:16 PM IST

மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் ரேவந்த் ரெட்டி கோரிக்கை விடுத்தார்.

புதுடெல்லி,

தெலுங்கானா மாநிலத்தின் முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, டெல்லியில் இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தெலுங்கானா மாநில வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான முக்கிய கோரிக்கைகளை பிரதமரிடம் ரேவந்த் ரெட்டி முன்வைத்தார்.

அதில் குறிப்பாக ஐதராபாத்தில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான முதலீடுகளை அதிகரிப்பது, மாநில மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவது, 13 மாநில நெஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்துவது உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியிடம் ரேவந்த் ரெட்டி பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்