< Back
தேசிய செய்திகள்
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
தேசிய செய்திகள்

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

தினத்தந்தி
|
22 Nov 2024 2:29 AM IST

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு மைகோ லே-அவுட்டில் கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ந் தேதி அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்த வாலிபர் ஒருவர், அங்கு தனியாக இருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மைகோ லே-அவுட் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் பி.டி.எம். லே-அவுட் என்.எஸ்.பாளையாவை சேர்ந்த அஜய் குவார் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர். இருப்பினும் அவர் ஜாமீனில் விடுதலையானார். இதற்கிடையில் இந்த போக்சோ வழக்கு தொடர்பான விசாரணை பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் கடந்த 12 ஆண்டுகளாக நடந்து வந்தது.

இந்தநிலையில் வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி ரமேஷ் தீர்ப்பு கூறினார். அப்போது குற்றம் சாட்டப்பட்ட அஜய்க்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து அஜய்யை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போலீசார் பரப்பன அக்ரஹாரா சிறையில் அறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்