< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
வீட்டுப்பாடம் முடிக்காத மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் - அதிர்ச்சி சம்பவம்
|22 Oct 2024 3:29 AM IST
தெலுங்கானாவில் வீட்டுப்பாடம் முடிக்காத மாணவனை ஆசிரியர் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்,
தெலுங்கானாவில் வீட்டுப்பாடம் முடிக்காத 6-ம் வகுப்பு மாணவனை ஆசிரியர் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பத்ராத்ரி கோத்தகுடெம் மாவட்டம் கொல்லாகுடெம் பகுதியில் உள்ள பள்ளியில் சதீஷ் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் வீட்டுப்பாடம் முடிக்காத 6-ம் வகுப்பு மாணவனை கொடூரமாக தாக்கியுள்ளார். வீட்டிற்கு வந்த மாணவனின் உடலில் இருந்த காயத்தை பார்த்த பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்துள்ளனர்.
அப்போது பள்ளியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் மாணவனை ஆசிரியர் கொடூரமாக தாக்கியது தெரிய வந்தது. இதையடுத்து ஆசிரியர் சதீஷ் மீது மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.