< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
குஜராத்தில் டாடா விமான தொழிற்சாலை: நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
|27 Oct 2024 4:20 AM IST
இந்திய ராணுவத்துக்கு சி-295 ரக விமானங்களை தயாரிப்பதற்காகவே இந்த தொழிற்சாலை உருவாக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
குஜராத்தின் வதோதரா நகரில் டாடா நிறுவனத்தின் விமான தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்துக்கு சி-295 ரக விமானங்களை தயாரிப்பதற்காகவே இந்த தொழிற்சாலை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலையை ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செசுடன் இணைந்து பிரதமர் மோடி நாளை (திங்கட்கிழமை) திறந்து வைக்கிறார். நாட்டில் ராணுவ விமானங்களுக்கான முதல் தனியார் தொழிற்சாலை இதுவாகும். இந்த தொழிற்சாலையில் ராணுவத்துக்காக 40 விமானங்களை தயாரித்து வழங்க டாடா நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது. ஸ்பெயின் பிரதமர் 2 நாள் பயணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது.