< Back
தேசிய செய்திகள்

தேசிய செய்திகள்
மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியின் எக்ஸ் பக்கத்தை கையாளும் தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி

8 March 2025 10:10 AM IST
மகளிர் தினத்தன்று தனது சமூக வலைதள பக்கங்களை பெண்கள் கையாள்வார்கள் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
புதுடெல்லி,
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி இன்று ஒருநாள் மட்டும் தனது சமூக வலைதள பக்கங்களை பெண்கள் கையாள்வார்கள் என்று பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி இன்று அவரது சமூக வலைதள பக்கங்களை பெண்கள் கையாண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் பிரதமர் மோடியின் எக்ஸ் பக்கத்தை தமிழக செஸ் வீராங்கனை கையாள்கிறார். இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடியின் எக்ஸ் பக்கத்தில் வைஷாலி பதிவிட்டுள்ளார்.
அதில், "வணக்கம். நான் வைஷாலி. மகளிர் தினத்தன்று பிரதமர் மோடியின் சமூக வலை தள பக்கத்தை கையகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்களில் பலருக்குத் தெரியும், நான் சதுரங்கம் விளையாடுகிறேன். மேலும் பல போட்டிகளில் நமது அன்பான நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.