< Back
தேசிய செய்திகள்
மேகதாது அணை கட்ட ஆட்சேபம் இல்லை என தமிழக அரசு கூற வேண்டும்;  வாட்டாள் நாகராஜ்
தேசிய செய்திகள்

மேகதாது அணை கட்ட ஆட்சேபம் இல்லை என தமிழக அரசு கூற வேண்டும்; வாட்டாள் நாகராஜ்

தினத்தந்தி
|
8 March 2025 3:41 PM IST

மேகதாது அணை கட்ட ஆட்சேபம் இல்லை என தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் கூற வேண்டும் இல்லையென்றால் படத்தை ஓட விடமாட்டோம் என்று வட்டாள் நாகராஜ் கூறியுள்ளார்.

பெங்களூரு,

மேகதாது நீர்தேக்கத்திட்டத்திற்கான ஆயத்தப்பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும் மத்திய அரசின் தகுதி வாய்ந்த அதிகாரிகளிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கர்நாடக அரசு பட்ஜெட்டில் நேற்று அறிவித்து இருந்தது. தமிழக அரசு அனுமதி இன்றி மேகதாது அணை கட்ட முடியாது எனவும் அமைச்சர் துரைமுருகன் இதற்கு பதிலளித்தார். இது தொடர்பாக துரைமுருகன் கூறுகையில், மத்திய அரசு நம்மை மீறி ஒப்புதல் கொடுக்க முடியாது மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகா மேகதாது அணை கட்ட முடியாது; மத்திய அரசும் நம்மை மீறி ஒப்புதல் அளிக்க முடியாது

இந்த நிலையில், கர்நாடக- தமிழக எல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட கன்னட அமைப்பை சேர்ந்த வாட்டாள் நாகராஜ், மேகதாது அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்கவில்லை என்றால் தமிழ் படங்கள் ஓடாது எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக வாட்டாள் நாகராஜ் கூறியதாவது:-மேகதாது அணை கட்ட ஆட்சேபம் இல்லை என தமிழக அரசு கூற வேண்டும். ஒரு மாதத்திற்குள் ஆட்சேபம் இல்லை என கூறாவிட்டால் தமிழ் படங்கள் ஓடாது. காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவே மேகதாது அணை கேட்கிறோம்" என்றார்.

மேலும் செய்திகள்