< Back
தேசிய செய்திகள்
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: தேசிய மகளிர் ஆணையம் நாளை விசாரணை

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: தேசிய மகளிர் ஆணையம் நாளை விசாரணை

தினத்தந்தி
|
29 Dec 2024 6:51 AM IST

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருந்தது.

புதுடெல்லி,

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி ஞானசேகரன்(37) என்ற நபரை கைது செய்தனர். இந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

இதற்கிடையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. இதன்படி இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 2 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்து தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் விஜயா ரகத்கர் உத்தரவிட்டிருந்தார்.

இதுதொடர்பான இந்த குழுவில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி மற்றும் மராட்டிய மாநில முன்னாள் டி.ஜி.பி. பிரவீன் தீட்சித் ஐ.பி.எஸ்.,(ஓய்வு) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் நாளை (திங்கள்கிழமை) சென்னைக்கு வர உள்ளதாக விஜயா ரகத்கர் தெரிவித்துள்ளார். இந்த விசாரணைக்குழுவினர் பாதிக்கப்பட்ட மாணவி, கல்லூரி மாணவர்கள், வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகள் உள்பட வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்த உள்ளனர். பின்னர் இது தொடர்பாக எடுக்க வேண்டிய மேல் நடவடிக்கைகளை தேசிய மகளிர் ஆணையத்துக்கு இந்தக் குழு பரிந்துரைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்