< Back
தேசிய செய்திகள்
பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: திருப்பதி தேவஸ்தானம்
தேசிய செய்திகள்

பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: திருப்பதி தேவஸ்தானம்

தினத்தந்தி
|
8 Jan 2025 5:07 PM IST

தேவஸ்தானம் தொடர்பாக பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை,

ஆந்திராவில் முந்தைய ஆட்சியின் போது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றிய முபினா நிஷ்கா பேகம் என்பவரின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக சில சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலானது.

சமூக ஊடங்களில் வெளியிடப்பட்ட வீடியோ கிளிப்பிங் திருப்பதி தேவஸ்தானத்துடன் தொடர்புடையது அல்ல என்று தேவஸ்தானம் மறுத்துள்ளது. மேலும் இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும் அப்படிப்பட்ட ஒருவர் தேவஸ்தான மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றியதில்லை என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தர்களை தவறாக வழிநடத்தும் வகையில் பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் எச்சரித்துள்ளது.

மேலும் செய்திகள்