< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஜம்மு வாலிபரை திருமணம் செய்து சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேச பெண் கைது
|9 Aug 2024 1:21 PM IST
கைது செய்த வங்காளதேச பெண்ணை போலீசார் 7 நாட்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு நகரின் தலாப் தில்லோ பகுதியில் உள்ளூர் வாலிபரை திருமணம் செய்து கொண்டு சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேச பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜூனகி சிராம் என்ற வங்காளதேச பெண் கடந்த 2022ம் ஆண்டு 3மாத விசாவில் ஜம்முவுக்கு வந்துள்ளார். அந்த பெண்ணின் விசா முடிவடைந்து நாடு திரும்பாத அவர் ஜம்முவின் திரிகுடா நகர் பகுதியை சேர்ந்த உள்ளூர் வாலிபரை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் அந்த தம்பதி தற்போது தலாப் டில்லோவின் பூரன் நகர் பகுதியில் வசித்து வந்தனர்.
இதையடுத்து, அந்த பெண் பற்றி போலீசாருக்கு கிடைந்த குறிப்பிட்ட தகவலின் பேரில் நோவாபாத்தில் இருந்து வந்த ஒரு போலீஸ் குழு அந்த பெண்ணை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வங்காளதேச பெண்ணை போலீசார் 7 நாட்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.