< Back
தேசிய செய்திகள்
பிரதமர் மோடி இரங்கல்

filepic

தேசிய செய்திகள்

இலங்கை எம்.பி. இரா. சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

தினத்தந்தி
|
1 July 2024 10:53 AM IST

இரா. சம்பந்தன் உடனான இனிய நினைவுகள் எப்போதும் நினைவுகூரப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டவர் இரா. சம்பந்தன் (வயது 91). இவர் இலங்கை அரசில் எம்.பி.யாக செயல்பட்டுள்ளார். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண பல்வேறு முயற்சிகளை இரா. சம்பந்தன் மேற்கொண்டார்.

இதனிடையே, வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக இரா. சம்பந்தன் கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரா. சம்பந்தன் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். இரா. சம்பந்தன் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் உள்ள தமிழர்களின் அமைதி, பாதுகாப்பு, சமத்துவத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வந்தவர் இரா. சம்பந்தன். சம்பந்தனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். சம்பந்தன் உடனான இனிய நினைவுகள் எப்போதும் நினைவுகூரப்படும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்