< Back
தேசிய செய்திகள்
எல்லையை காக்கும் வீரர்கள்: புத்தாண்டு தினத்தில் இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோ
தேசிய செய்திகள்

எல்லையை காக்கும் வீரர்கள்: புத்தாண்டு தினத்தில் இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோ

தினத்தந்தி
|
1 Jan 2025 6:40 PM IST

ராணுவ வீரர்களின் வீரத்தை பறைசாற்றும் வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

உலகம் முழுவதும் 2025 புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவின் எல்லைகளை பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் தியாகம் மற்றும் வீரத்தை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் இந்திய ராணுவம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

ராஜஸ்தானில் கோடைக் காலத்தில் வாட்டி எடுக்கும் கடுமையான வெப்பம் மற்றும் லடாக், காஷ்மீர், இமாசல பிரதேசம், அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிம் உள்ளிட்ட இடங்களில் உறைய வைக்கும் குளிர் ஆகியவற்றை தாங்கிக் கொண்டு நமது ராணுவ வீரர்கள் கடமையில் உறுதியாக உள்ளனர்.

கரடுமுரடான நிலப்பரப்பு, பனியால் மூடப்படும் இடங்கள், பருவமழையில் சதுப்பு நிலமாக மாறும் இடங்கள் என அனைத்து சவால்களிலும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் எல்லையில் உறுதியாக நிற்கும் ராணுவ வீரர்களின் வீரத்தை பறைசாற்றும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்