< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மும்பை விமான நிலையத்தில் ரூ.7.6 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் - இருவர் கைது
|24 Oct 2024 4:02 PM IST
மும்பை விமான நிலையத்தில் ரூ.7.6 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை,
மும்பை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை வந்திறங்கிய பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது 2 பயணிகள் போலியான அடையாள சான்றுகளுடன் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், இருவரும் தங்கள் உடைமைகளில் 9.487 கிலோ தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
அவர்களிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 7 கோடியே 69 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.