< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்தது - அதிர்ச்சி சம்பவம்
|28 Aug 2024 2:44 AM IST
குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்தது.
காந்தி நகர்,
குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் சுரேந்திரநகர் மாவட்டம் சொலிடா பகுதியில் கனமழை காரணமாக போஹவோ ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் சொலிடா நகரையும் ஹபிஹாசிர் நகரையும் இணைக்கும் பாலம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது.
இதுகுறித்து யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.