< Back
தேசிய செய்திகள்
பீகாரில் கார் மோதியதில் 6 பேர் பலி
தேசிய செய்திகள்

பீகாரில் கார் மோதியதில் 6 பேர் பலி

தினத்தந்தி
|
19 Oct 2024 4:24 PM IST

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

பாட்னா,

பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தின் புல்லிடுமர் காவல் நிலைய பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் வேகமாக வந்த சொகுசு கார் நடைபாதையில் மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து கார் டிரைவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினார்.

இந்த கோர விபத்தில் நடைபாதையில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து பற்றி தகவலறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர். இதனால் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமார் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்