< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கர்நாடகா இடஒதுக்கீடு மசோதா கொண்டுவருவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது- சசிதரூர் தாக்கு
|19 July 2024 10:47 PM IST
மசோதாவை நிறுத்தி வைத்த சித்தராமையா தலைமையிலான அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது என்று சசி தரூர் கூறியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு கன்னடர்களுக்கே வேலை கொடுக்கும் மசோதா கொண்டு வர மாநில அரசு முடிவு செய்தது. எனினும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் இந்த முடிவை கர்நாடக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக திருவனந்தபுரம் எம்பியும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சசி தரூர் கூறியதாவது:-
ஒவ்வொரு மாநிலமும் இதுபோன்று சட்டத்தை கொண்டுவந்தால் என்னவாகும்? இது அரசியலமைப்புக்கு விரோதமானது. அரசியலமைப்பின் படி, ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் சுதந்திரமாக வாழவும், வேலை செய்யவும், பயணம் செய்யவும் உரிமை உண்டு. எனினும்,மசோதாவை நிறுத்தி வைத்த சித்தராமையா தலைமையிலான அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது என்று சசி தரூர் கூறியுள்ளார்.