< Back
தேசிய செய்திகள்
சாலையில் நடந்த சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
தேசிய செய்திகள்

சாலையில் நடந்த சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது

தினத்தந்தி
|
28 Nov 2024 3:25 AM IST

சாலையில் நடந்த சென்ற இளம்பெண்ணுக்கு வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமமூர்த்திநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். அவர், கடந்த 11-ந் தேதி இரவு வெளியே சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சாலையோரம் நடந்து சென்ற அந்த இளம்பெண்ணுக்கு அந்த வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்து விட்டு வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார். இது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதே நேரத்தில் வாலிபரின் மோட்டார் சைக்கிளின் வாகன பதிவெண் பலகையை இளம்பெண் செல்போனில் படம் பிடித்திருந்தார்.

இதுபற்றி ராமமூர்த்திநகர் போலீசில் இளம்பெண் புகார் அளித்ததுடன், அந்த புகைப்படத்தையும் வழங்கினார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும் மோட்டார் சைக்கிளின் வாகன பதிவெண் மூலமாக மர்மநபரை தேடிவந்தனர்.

இதையடுத்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது ராமமூர்த்தி நகரை சேர்ந்த அருண் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்