< Back
தேசிய செய்திகள்
ஜெய்ப்பூர்: வாகனங்கள் மோதி பயங்கர தீ விபத்து - 7 பேர் பலி; 30க்கும் மேற்பட்டோர் காயம்
தேசிய செய்திகள்

ஜெய்ப்பூர்: வாகனங்கள் மோதி பயங்கர தீ விபத்து - 7 பேர் பலி; 30க்கும் மேற்பட்டோர் காயம்

தினத்தந்தி
|
20 Dec 2024 8:31 AM IST

பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. பெட்ரோல் பங்க் தீ விபத்தில் சிக்கி பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாகவும் 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

10 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள், பெட்ரோல் பங்கில் பிடித்த தீயை அணைக்க போராடி வருகின்றனர். இன்று அதிகாலை 5.30 மணியளவில் பெட்ரோல் பங்கில் ரசாயனம் ஏற்றி சென்ற லாரி மற்றொரு வாகனத்தின் மீது மோதியதில் தீப்பிடித்தது.ரசாயனம் ஏற்றிச்சென்ற லாரியில் பிடித்த தீ, அருகில் இருந்த வாகனங்களுக்கும் பரவியதாக தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை சந்திக்க முதல்-மந்திரி பஜன் லால் சர்மா மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

மேலும் செய்திகள்