< Back
தேசிய செய்திகள்
மினிவேன் மீது பஸ் மோதி கோர விபத்து - 7 பேர் பலி
தேசிய செய்திகள்

மினிவேன் மீது பஸ் மோதி கோர விபத்து - 7 பேர் பலி

தினத்தந்தி
|
29 Sept 2024 2:42 AM IST

மினிவேன் மீது பஸ் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

காந்திநகர்,

குஜராத் மாநிலம் தேவ்பூமி திவார்கா மாவட்டம் திவார்காவில் இருந்து அகமதாபாத்திற்கு நேற்று மாலை 7.30 மணியளவில் பஸ் சென்றுகொண்டிருந்தது.

தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது அதேசாலையின் மறுபுறத்தில் காந்திநகரில் இருந்து திவார்கா நோக்கி மினிவேன் வந்துகொண்டிருந்தது.

அப்போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை தாண்டி எதிரே வந்த மினிவேன் மீது அதிவேகமாக மோதியது. மேலும், எதிரே வந்த கார், பைக் மீதும் பஸ் மோதியது.

இந்த கோர விபத்தில் மினிவேனில் பயணித்த 6 பேர், பஸ்சில் பயணித்த ஒருவர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 14 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்