< Back
தேசிய செய்திகள்
ராகிங் செய்த சீனியர்கள்; மயங்கி விழுந்து உயிரிழந்த மருத்துவ மாணவர் - போலீஸ் விசாரணை
தேசிய செய்திகள்

ராகிங் செய்த சீனியர்கள்; மயங்கி விழுந்து உயிரிழந்த மருத்துவ மாணவர் - போலீஸ் விசாரணை

தினத்தந்தி
|
17 Nov 2024 5:25 PM IST

நீண்ட நேரம் நிற்க வைத்ததால் மருத்துவ கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காந்திநகர்,

குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தில் உள்ள தர்பூர் பகுதியில் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்குள்ள விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கியிருந்து படித்து வருகின்றனர். இதில் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு சீனியர் மாணவர்கள் சிலர் முதலாமாண்டு மாணவர்களை அழைத்து, அவர்கள் அனைவரையும் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நிற்க வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது 18 வயதான அணில் மெதானியா என்ற மாணவர், திடீரென மயங்கி விழுந்தார்.

அவரை உடனடியாக சக மாணவர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் மாணவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் விரைந்து வந்து மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து உயிரிழந்த மாணவரின் உறவினர் ஒருவர் கூறுகையில், "அணில் மெதானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. ஆனால் இங்கு வந்து பார்த்தபோது அவர் உயிழந்துவிட்டதாக கூறினர். அவரை மூன்றாமாண்டு மாணவர்கள் சிலர் நீண்ட நேரம் நிற்க வைத்து ராகிங் ராகிங்செய்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு மரணத்திற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். எங்களுக்கு நீதி கிடைக்க கல்லூரி நிர்வாகமும், அரசாங்கமும் உதவ வேண்டும்" என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்