< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்
|14 Nov 2024 12:25 PM IST
மணிப்பூரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய சோதனையில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.
இம்பால்
மணிப்பூரின் ஜிரிபாம் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பாதுகாப்புப்படையினர் கைப்பற்றியதாக போலீசார் இன்று தெரிவித்துள்ளார்.
போலீசாரின் அறிக்கையின்படி, நேற்று ஜிரிபாம் மாவட்டத்தின் சம்பாநகர், நாராயண்பூர் மற்றும் தங்போபுஞ்ச்ரே பகுதிகளில் பாதுகாப்புப்படையினர் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையின் போது 36 தோட்டா மற்றும் 5 வெற்று தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.
அதேபோல, சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள எச் கோட்லியான் கிராமத்தில் இருந்து ஒரு 303 ரக துப்பாக்கி, ஒரு பிஸ்டல், 303 ரக ரைபிள் ஒன்று, இரண்டு குறுகிய தூரம் பாயும் பீரங்கி, இரண்டு நீண்ட தூரம் பாயும் பீரங்கி, வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.