மணிப்பூரில் 3.6 கிலோ வெடிப்பொருட்கள் பறிமுதல்
|வெடிக்கக்கூடிய வெடிப்பொருட்களை செயலிழக்க செய்யும் பணியில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
இம்பால்,
மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தின் லீசாங் கிராமத்தில் வெடிப்பொருட்கள் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், அசாம் ரைபிள்ஸ், பாதுகாப்புப்படையினர் மற்றும் மணிப்பூர் போலீசார் ஒரு கூட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இம்பால்-சராசந்த்பூர் வழித்தடத்தில் உள்ள ஒரு பாலத்தின் அடியில் இருந்து 3.6 கிலோ வெடிப்பொருட்களை பாதுகாப்புப்படையினர் கைப்பற்றினர். இந்த வெடிப்பொருட்களில் வெடிக்கக்கூடிய டெட்டனேட்டர்கள், கார்டெக்ஸ் மற்றும் பிற பாகங்களை மீட்டுள்ளனர். மேலும் இந்த வெடிப்பொருட்களை செயலிழக்க செய்ய வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள மோல்ஜோல் கிராமத்தில் இருந்து 4 நாட்டு துப்பாக்கிகள், ஒரு ரிவால்வர் மற்றும் வெடிமருந்துகள் உட்பட ஏழு துப்பாக்கிகளை பாதுகாப்புப்படையினர் நேற்று கைப்பற்றியதாக மணிப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.