காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு - 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
|காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்,
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ஹல்கன் காலி பகுதி அருகே இன்று பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த மோதலில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளில் ஒருவர் வெளிநாட்டவர் என்பதும், மற்றோரு நபர் உள்ளூரைச் சேர்ந்தவர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிவதற்கான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இதே போல், ஸ்ரீநகரின் கன்யார் பகுதியிலும் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகளிடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இந்த மோதலில் இதுவரை இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.