காஷ்மீரில் துப்பாக்கி சண்டை - பயங்கரவாதி சுட்டுக்கொலை
|காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
குப்வாரா,
காஷ்மீரின் குப்வாரா மாவட்டதில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அங்குள்ள லோலாப் என்ற பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்த நடவடிக்கையின்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அந்த நபரிடம் இருந்து ஒரு துப்பாக்கி, கையெறி குண்டுகள், துப்பாக்கி குண்டுகள் மற்றும் வெடிப்பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இதே போல் காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள கெட்சன் வனப்பகுதியில், கடந்த செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அங்கு தற்போது பாதுகாப்பு படை வீரர்கள் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.