< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு; 4 நக்சலைட்டுகள் பலி
|7 Jun 2024 8:34 PM IST
சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் நாராயன்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட ரிசர்வ் படையினர் நாராயன்பூர்- தண்டேவாடா எல்லைப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த மோதலில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.