< Back
தேசிய செய்திகள்
பள்ளி முதல்வர் கடலில் மூழ்கி உயிரிழப்பு - சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

பள்ளி முதல்வர் கடலில் மூழ்கி உயிரிழப்பு - சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்

தினத்தந்தி
|
29 Dec 2024 6:40 AM IST

மராட்டியத்தில் சுற்றுலா சென்ற இடத்தில் பள்ளி முதல்வர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் ஹவேலி தாலுகாவில் உள்ள மகாத்மா ஜோதிராவ் உயர்நிலை பள்ளியின் முதல்வராக இருந்தவர் தர்மேந்திரா தேஷ்முக். இவர் பள்ளிக்கூட ஆசிரியர்களுடன் ராய்காட் மாவட்டம் காசித் கடற்கரைக்கு சுற்றுலா சென்றிருந்தார். இவர்கள் நேற்று முன்தினம் மாலையில் கடலில் இறங்கி குளித்தனர்.

அப்போது பள்ளி முதல்வர் தர்மேந்திரா தேஷ்முக் திடீரென கடல் அலையில் சிக்கி தத்தளித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் அவரை மீட்க முயன்றனர். ஆனால் மீட்க முடியவில்லை. தகவலின் பேரில் மீட்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் பள்ளி முதல்வரை போராடி மீட்டனர். உடனடியாக அவரை போரிவிலியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து அலிபாக் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்