< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
காஷ்மீரில் பள்ளியில் தீவிபத்து
|15 Nov 2024 2:40 AM IST
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே உள்ள குர்சூ ராஜ்பாக் பகுதியில், முஸ்லிம் பொதுப்பள்ளி உள்ளது. நேற்று மதியம் பள்ளியில் மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தபோது, பள்ளியின் மேற்பரப்பில் திடீரென தீப்பற்றியதாக தெரிகிறது. இதையடுத்து மாணவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
இது குறித்த தகவல் தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.பின்னர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கடும் போராட்டத்திற்குப் பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கட்டிடத்தின் மேற்பரப்பு தீயினால் சேதம் அடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.