< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மதுபானக் கொள்கை வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் கிடைக்குமா? சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
|20 Aug 2024 3:27 AM IST
திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் கவிதா தனக்கு ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் ஆம் ஆத்மி கொண்டு வந்த புதிய மதுபான கொள்கை வழக்கில் முறைகேடு எழுந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இது தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தெலுங்கானா முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகரராவ் மகளும் பி.ஆர்.எஸ். கட்சியைச் சேர்ந்தவருமான கவிதா கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.
தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் கவிதா தனக்கு ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.