< Back
தேசிய செய்திகள்
நீதிபதி சர்ச்சை கருத்து: நெறிமுறைகளை உருவாக்கும் நேரமிது - சுப்ரீம் கோர்ட்டு கருத்து
தேசிய செய்திகள்

நீதிபதி சர்ச்சை கருத்து: நெறிமுறைகளை உருவாக்கும் நேரமிது - சுப்ரீம் கோர்ட்டு கருத்து

தினத்தந்தி
|
20 Sept 2024 12:21 PM IST

வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி

கோர்ட்டு நடவடிக்கைகளில் போது கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி ஸ்ரீஷானந்தா, நில உரிமையளருக்கும்- குத்ததைதாரருக்கும் இடையிலான பிரச்சினை தொடர்பான வழக்கில் பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியை பாகிஸ்தான் என அழைத்தார். இது மிகவும் சர்ச்சையானது. அத்துடன் பெண் வழக்கறிஞருக்க எதிராக வெறுக்கத்தக்க வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில், கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி தெரிவித்த சர்ச்சைக்குரிய மற்றும் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் எத்தனை கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் இப்போது நாம் அனைவருமே மிகவும் உற்று நோக்கப்படுகின்றோம். எனவே அதை மனதில் வைத்து நீதிபதிகள் செயல்பட வேண்டும் என தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 2 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நீதிபதியின் அறுவுறுத்தல்களை கேட்டு கர்நாடக ஐகோர்ட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்