< Back
தேசிய செய்திகள்
ரேணுகாசாமி கொலை வழக்கு: நடிகர் தர்ஷனின் ஜாமீனை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
தேசிய செய்திகள்

ரேணுகாசாமி கொலை வழக்கு: நடிகர் தர்ஷனின் ஜாமீனை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

தினத்தந்தி
|
24 Jan 2025 3:59 PM IST

ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா உள்பட 7 பேரின் ஜாமீனை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

டெல்லி,

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்தவர் ரேணுகாசாமி. கன்னட நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகரான இவர், நடிகையும், தர்ஷனின் தோழியான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி இருந்தார். இதனால் ரேணுகாசாமியை கடந்த ஆண்டு ஜூன் 8ம் தேதி நடிகர் தர்ஷன், தனது கூட்டாளிகள் மூலம் கடத்தி வந்து படுகொலை செய்தார். இதுகொலை தொடர்பாக நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேர் கடந்த ஜூன் 11ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட பலருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. அந்த வகையில் இந்த கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா உள்பட 7 பேருக்கு டிசம்பர் 13ம் தேதி கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

இதனிடையே, நடிகர் தர்ஷன் உள்பட 7 பேருக்கு கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது

இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 7 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. அதேவேளை, இந்த வழக்கில் நடிகர் தர்ஷன் உள்பட 7 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பிய சுப்ரீம் கோர்ட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.

மேலும் செய்திகள்