< Back
தேசிய செய்திகள்
தமிழைவிட சமஸ்கிருதமே பழமையான மொழி: பா.ஜனதா எம்.பி நிஷிகாந்த் துபே
தேசிய செய்திகள்

தமிழைவிட சமஸ்கிருதமே பழமையான மொழி: பா.ஜனதா எம்.பி நிஷிகாந்த் துபே

தினத்தந்தி
|
10 March 2025 4:44 PM IST

தமிழைவிட சமஸ்கிருதமே பழமையான மொழி என்று மக்களவையில் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று காலை தொடங்கியது. இரண்டாவது அமர்வின் முதல் நாளான இன்று மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக அவையில் காரசார விவாதம் நடைபெற்றது. இதற்கிடையே, தேசிய கல்விக் கொள்கை பற்றி பேசிய ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபே சமஸ்கிருதம்தான் பழமையான மொழி என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது:தமிழ் மிகவும் பழமையான மொழி என்கிறார்கள். ஆனால், சமஸ்கிருதம் என்பது அதனைவிட பழமையான மொழி. கர்நாடகம், தெலங்கானா, தமிழகம் உள்பட நாடு முழுவதும் அனைத்து கோயில்களிலும் வழிபாட்டு மொழி சமஸ்கிருதம்தான்.தேர்தலுக்காக கல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள்" என்றார்.

மேலும் செய்திகள்