< Back
தேசிய செய்திகள்
சபரிமலை சீசன்:  கர்நாடகா-கேரளா இடையே சிறப்பு ரெயில்
தேசிய செய்திகள்

சபரிமலை சீசன்: கர்நாடகா-கேரளா இடையே சிறப்பு ரெயில்

தினத்தந்தி
|
28 Nov 2024 2:21 AM IST

சபரிமலை சீசனையொட்டி கர்நாடகா- கேரளா இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சபரிமலை சீசனையொட்டி பக்தர்களின் வசதிக்காக கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து அடுத்த மாதம் (டிசம்பர்) 5, 12, 19, 26 மற்றும் ஜனவரி 2, 9 ஆகிய தேதிகளில் மாலை 5.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்- 07313) மறுநாள் மாலை 4.30 மணிக்கு கேரள மாநிலம் கொல்லம் சென்றடையும். அதே போல, கொல்லத்தில் இருந்து அடுத்த மாதம் 6, 13, 20, 27 மற்றும் ஜனவரி 3, 10 ஆகிய தேதிகளில் மாலை 6.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07314) மறுநாள் இரவு 7.35 மணிக்கு ஹூப்ளி வந்தடையும்.

கர்நாடக மாநிலம் பெலகாவியில் இருந்து அடுத்த மாதம் 9, 16, 23, 30 மற்றும் ஜனவரி 6, 13 ஆகிய தேதிகளில் மதியம் 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07317) மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். அதே போல, கொல்லத்தில் இருந்து அடுத்த மாதம் 10, 17, 24, 31 மற்றும் ஜனவரி 7, 14 ஆகிய தேதிகளில் மாலை 6.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07318) மறுநாள் இரவு 10 மணிக்கு பெலகாவி வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்