< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு- கேரள அரசு
|3 Nov 2024 1:30 AM IST
சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு ரூ. 5 லட்சத்திற்கான இலவச காப்பீட்டுத் திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையைக் காண சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர்.இந்த ஆண்டு மண்டல பூஜை டிசம்பர் 26 மற்றும் மகர விளக்கு பூஜை வருகிற ஜனவரி 14 அன்றும் நடைபெற உள்ளது.இதற்கான முன்னேற்பாடுகள் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் கேரள மாநில அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், சபரிமலைக்கு யாத்திரை செல்லும் பக்தர்கள் எவரேனும் உயிரிழந்தால் அவர்களுக்கான காப்பீட்டுத் தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது..